தமிழகத்தில் நாளை வெள்ளிக்கிழமை, மே 9ஆம் தேதி பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படவுள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்தின் அறிவிப்பின்படி, பல்வேறு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும்.மின்தடை ஏற்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு இது குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும், மின் சாதனங்கள் சேதமடையாதிருக்கவும் இந்த தடை அவசியம் என கூறப்படுகிறது. மின் வாரிய ஊழியர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.சென்னையில் முழு பட்டாபிராம், CTH சாலை, திருவள்ளுவர் நகர், கக்கன்ஜி நகர், சத்திரம், காமராஜ புரம், சோழன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை அமலாகும்.

VGN பகுதியில் முதல் கட்டம் முதல் ஏழாவது கட்டம் வரை, ஐயப்பன் நகர், கண்ணப்பாளையம், VGV நகர், தனலட்சுமி நகர் ஆகிய இடங்களிலும் மின் தடை ஏற்படும்.திருவாரூரில் மேட்டுப்பாளையம், விளக்குடி, ராயநல்லூர் பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.பராமரிப்பு பணி முடிந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் வழமைக்கு திரும்பும் என கூறப்படுகிறது.
இந்த மின்தடையை பொறுத்து மக்கள் தற்காலிக ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஆலோசிக்கப்பட்டுள்ளனர்.இந்த அறிவிப்பு மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ தகவலாகும். மேலும் விவரங்களை மின் வாரியத்தின் இணையதளம் மற்றும் பத்திரிகைகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.மின் விநியோகத்தில் ஏற்படும் தடை, திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணியின் ஒரு பகுதியாகும். இதற்காக தவிர்க்க முடியாதவையாக தடை அமலாக்கப்படுகிறது. பொதுமக்கள் இதனை புரிந்துகொண்டு பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.