தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சத்துணவுக்கூடம் திறப்பு விழா நடந்தது.
பாராளுமன்ற உறுப்பினர் நிதி ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்ட சத்துணவு கூடத்தை குமரி எம். பி. விஜய்வசந்த் திறந்து வைத்தார்.
தக்கலை அமலா கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி 2023-2024 மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டி பணிகள் நிறைவடைந்தது.
இதையடுத்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இந்த சத்துணவு கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.