திருப்பூர்: திருப்பூர் பல்லடம் ரோட்டில் பல பகுதிகளில் இருந்து, சரக்கு வாகனங்கள் மற்றும் சாலையோர கடைகளில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு, சீசனுக்கு ஏற்ப பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. தற்போது கொய்யா சீசன் துவங்கியுள்ளதால் பழனி, ஆயக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கொய்யா பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இவை பல்லடம் ரோட்டில் உள்ள சரக்கு வேன்களிலும், சாலையோர கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பழனி, ஆயக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொய்யா பழங்கள் கொண்டு வரப்பட்டு, 23 கிலோ டிப்பரில் ரூ.1400 முதல் ரூ.1600 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவை சில்லரை விற்பனையில் தரத்திற்கு ஏற்ப கிலோ ரூ.60 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது.