தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவேரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 6,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 6,500 கன அடியாக அதிகரித்தது. இந்நிலையில் நேற்று காலை அளவீட்டின் போது நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 7,236 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 7,084 கன அடியாக குறைந்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 5,000 கன அடி வீதமும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று அணை நீர்மட்டம் 106.19 அடியாகவும், நீர் இருப்பு 73.09 டிஎம்சியாகவும் இருந்தது.