மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை நம்பி, ஒகேனக்கல், மேட்டூர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில், நேற்று முன்தினம், 1,200 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, வினாடிக்கு, 1,500 கன அடியாக அதிகரித்தது.

இதனால் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி, காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 274 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 424 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று முன்தினம் 107.59 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 107.53 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 74.94 டிஎம்சி.