சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 10ம் தேதி வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக இருந்த திறப்பு, டெல்டா பகுதிகளில் பாசனத் தேவை அதிகரித்ததை கருத்தில் கொண்டு நேற்று (டிச., 14) முதல் வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி 90 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.