மத்திய மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு உயர்த்தப்பட்டுள்ளது. 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 3 உயர்த்த வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 3 உயர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. திடீர் காற்று மற்றும் மழையுடன் கூடிய வானிலையைக் குறிக்கும் வகையில் 7 துறைமுகங்களில் சூறாவளி எச்சரிக்கை கூண்டு எண் 3 உயர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மணிக்கு 55 கிமீ வேகத்தில் இடைவிடாத காற்று வீசுகிறது. மேலும் காற்றின் வேகம் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.