பேராவூரணி: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் சமூக நலத்துறை சார்பில், ‘பெண் குழந்தைகளை காப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற திட்டத்தின் கீழ் பேராவூரணி வட்டம் காலகம் ஊராட்சியில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
இதில் சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மூலம் நடைபெறுகின்ற பணிகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. முன்னதாக ஊட்டச்சத்து கண்காட்சி அமைத்து மக்களுக்கு கேழ்வரகு கஞ்சி, கொழுக்கட்டை, சுண்டல் வழங்கப்பட்டது.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. மாதாமாதம் தவறாமல் எடை பார்த்த குழந்தைகளில் சிறந்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் காலகம் ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்) ராஜேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் லதா, கண்காணிப்பாளர் ரமேஷ், மேற்பார்வையாளர் செல்வநிதி, பேராவூரணி வட்டாரத்தை சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
m’;