சென்னை: பண்டிகை கால நெரிசலை தவிர்க்கும் வகையில், தாம்பரம்-திருச்சி இடையே பகல் நேர இன்டர்சிட்டி சிறப்பு ரயில் டிசம்பர் 11-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை இயக்கப்படுகிறது.
சென்னையில் வசிப்பவர்கள் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனால், பண்டிகை நாட்களில் பஸ், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
சென்னையில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளை சொந்த ஊர்களில் கொண்டாட செல்வது வழக்கம்.
இந்த பண்டிகை நாட்களில் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகை வருடத்தின் இந்த மாதத்தில் (அக்டோபர்) வருகிறது. ஆயுதபூஜை 11-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
12-ம் தேதி விஜயதசமி மற்றும் 13-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை. தீபாவளி டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இதனால் பண்டிகை நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படுமா என பயணிகள் காத்திருந்தனர்.
இந்நிலையில், வரும் 11-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு வாரத்தில் 5 நாட்கள் (திங்கள் மற்றும் வியாழன் தவிர) பகல் நேர இன்டர்சிட்டி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் (06190) திருச்சியில் இருந்து வாரத்தில் 5 நாட்கள் செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் காலை 5.35 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூருக்கு காலை 6.24 மணிக்கும், கும்பகோணத்துக்கு காலை 6.58 மணிக்கும், மயிலாடுதுறைக்கு காலை 7.28 மணிக்கும், சீர்காழிக்கு 7.52 மணிக்கும் புறப்படும்.
சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு மதியம். 12.30 மணிக்கு செல்கிறது. பின்னர் அங்கிருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (06191) சீர்காழிக்கு இரவு 7.52 மணிக்கும், மயிலாடுதுறைக்கு இரவு 8.43-க்கும், கும்பகோணம் இரவு 9.18-க்கும், தஞ்சைக்கு இரவு 10.13-க்கும், திருச்சிக்கு இரவு 11.35க்கும் சென்றடையும்.
இந்த ரயிலில் 12 இருக்கைகள் கொண்ட பெட்டிகள் மற்றும் 6 ஸ்லீப்பர் பெட்டிகள் உட்பட 20 பெட்டிகள் உள்ளன. எனவே பயணிகள் இந்த ரயிலை பயன்படுத்தி கூட்ட நெரிசலின்றி பயணம் செய்யலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.