இந்த ஆண்டு ஐஐடி மெட்ராஸில் 2 பிடெக் படிப்புகள் உட்பட 4 புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இது தொடர்பாக, ஐஐடி மெட்ராஸ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியது:- இன்றைய கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறையின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில், 2025-2026 கல்வியாண்டில் ஐஐடி மெட்ராஸில் பிஎஸ் வேதியியல், எம்டெக் மின்சார வாகனங்கள், பிடெக் கணக்கீட்டு பொறியியல் மற்றும் இயக்கவியல், பிடெக் கருவி மற்றும் உயிரி மருத்துவ பொறியியல் ஆகிய 4 புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஐஐஎஸ்இஆர்) நடத்தும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் பிஎஸ் வேதியியலுக்கான சேர்க்கை நடைபெறும், எம்டெக் மின்சார வாகனங்களுக்கான சேர்க்கை கேட் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் இருக்கும், மற்ற இரண்டு பிடெக் படிப்புகளுக்கான சேர்க்கை ஜேஇஇ நுழைவுத் தேர்வின் அடிப்படையில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.