சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு ஆன்லைன் எம்பிஏ படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. எம்பிஏ படிப்பு ஆங்கிலத்தில் வணிக பகுப்பாய்வு மற்றும் பொது மேலாண்மை ஆகிய இரண்டு பிரிவுகளில் வழங்கப்படுகிறது. ஆன்லைன் எம்பிஏ படிப்பு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) மற்றும் தொலைதூரக் கல்வி வாரியம் ஆகிய இரண்டாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பட்டதாரிகள் இந்த எம்பிஏ படிப்பில் சேரலாம். அவர்கள் ஆன்லைனில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தப் படிப்பில் சேர விரும்புவோர் https://onlinecde.annauniv.edu என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி மார்ச் 22-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு மார்ச் 29-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.