சென்னை: நாகை மாவட்டத்தில் இருந்து வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின் இந்த தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில், இலங்கைத் தலைநகரில் மீனவர் நலனுக்கான இந்திய, இலங்கை கூட்டுச் செயற்குழுக் கூட்டம் நாளை மறுநாள் 29-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையின் அணுகுமுறை என்ன? அது தெரியவில்லை. மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காணக்கூடாது என இலங்கை நினைக்கிறதா? என்ற சந்தேகத்தை இந்த சம்பவம் காட்டுகிறது இன்றைய சூழலில் மீனவர்கள் கைது பிரச்சனைக்கு தீர்வு காண்பதே முக்கிய தேவையாக உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு நாளை மறுநாள் நடைபெறும் இந்திய-இலங்கை கூட்டு செயற்குழு கூட்டத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக படகுகளுடன் விடுவிக்கவும், மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.