சென்னை : ரூ.101, 201 என எரிபொருள் நிரப்பலாமா? இந்த கேள்வி இருசக்கர வாகன ஓட்டுனர்கள் மத்தியில் அதிகம் எழுப்பப்பட்டு வருகிறது. இதன் பின் உள்ள உண்மை என்ன?
எரிபொருள் நிலையத்திற்கு செல்லும் பலர் பூஜ்ஜியத்தில் முடியும் தொகையில் பெட்ரோல், டீசல் வாங்கினால் ஏமாற்றப்படுவோம் என எண்ணி ஒற்றைப்படை இலக்கத்தில் முடியும் விலைக்கு எரிபொருள் நிரப்புகின்றனர்.
இது முற்றிலும் உண்மைக்கு மாறான தகவல் என பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் கூறுகின்றனர். மேலும், எவ்வளவு தொகை செலுத்துகிறோமோ அதற்கு ஏற்ற எரிபொருள் மட்டுமே நிரப்பப்படும் என தெரிவித்துள்ளனர்.
சிலர் கூறுவது போல் பூஜ்ஜியத்தில் முடியும் தொகையில் குறைந்த அளவு தான் எரிபொருள் நிரப்பப்படுகிறது என்பதும் நிரூபிக்கப்பட்ட ஒன்றாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.