தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி முகைதீன் ஆண்டவர் ஜாமியா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையை முடித்து வெளியே வந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
வக்பு திருத்த மசோதாவை உடன் திரும்ப பெற வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளால் இஸ்லாமியர்கள் மத்தியில் மிகுந்த மன உளைச்சல் ஏற்படுகிறது. மத்திய அரசு இஸ்லாமியர்களை பாதிக்கும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பன போன்ற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதே போல் தஞ்சையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய மாவட்டம் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதற்கு மத்திய மாவட்ட செயலாளர் இரா.விஜய்சரவணன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர்கள் எம்.எஸ்.வசந்த், சாய்ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் முத்துப்பாண்டியன், தமிழ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் தஞ்சை, திருவையாறு தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய செயலாளர்கள் ஆபெல், ஆனந்த், சந்தோஷ், ஜெகதீசன், வீரமணி, கார்த்தி, ரஜினி , மாவட்ட நிர்வாகிகள் செந்தில், முருகேசன், பாரி, மெர்சி மற்றும் பகுதி கழக செயலாளர்கள், கிளை, ஊராட்சி நிர்வாகிகள் ,