சென்னை: நாய்களை பாதுகாப்போம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
உலக நாய்கள் தினம் இன்று (ஆகஸ்ட் 26) கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தெரு நாய்களை அழிப்பதற்கு பதிலாக கருத்தடை, தடுப்பூசி, காப்பகங்கள் மூலம் பாதுகாப்போம். இந்து மரபில், பைரவர் வடிவமாக வழிபடப்படும் நாய்கள், விஸ்வாசத்தையும், நன்றியையும் வெளிப்படுத்துகின்றன.
நாய்க்கடி ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை பெறுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு தேவை” என அவர் கூறியுள்ளார்.