திருதுறைத்பூண்டி: மக்கள் தன்னுடன் இருப்பதால், வரும் சட்டசபை தேர்தலில், தன் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என, சசிகலா கூறினார். திருவாரூர் மாவட்டம், திருதுறைத்பூண்டியில் பிரசித்தி பெற்ற பரவி மருந்தீஸ்வரர் கோவில் பந்த கால் முகூர்த்தம் கடந்த 16-ம் தேதி நடந்தது. 20-ம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை இரவு, 63 ஆண்டுகளுக்கு பின், கோவில் கருப்பர் அபிஷேகம், திருவீதியுலா நடந்தது.

இந்நிலையில் நேற்று உபயதாரர் மன்னார்குடி செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை தலைவர் திவாகரன் தலைமையில் கொடியேற்று விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட சசிகலா நிருபர்களிடம் கூறியதாவது:- வரும் சட்டசபை தேர்தலில் எனது பங்களிப்பு நிச்சயம் இருக்கும். நிச்சயம் மாற்றம் வரும். ஜெயலலிதா கொடுத்த ஜனநாயகத்தை மீண்டும் கொண்டு வருவோம். ஜெயலலிதா ஆட்சியில் மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினார். மக்கள் தம்முடன் இருப்பதால் வரும் சட்டசபை தேர்தலில் அவரது பங்கு மிக மிக அதிகமாக இருக்கும் என்றார்.