சென்னை: சென்னையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி நேற்று அளித்த பேட்டி:- சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் குற்றம் நடந்துள்ளது. பெண் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு சரியாக நடந்து குற்றவாளிகளுக்கு நியாயமான தண்டனை கிடைத்தால்தான் பெண்ணுக்கு நீதி கிடைக்கும். அதில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதுதான் முக்கியம். பொள்ளாச்சியில் நடந்தது போல் நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளிகளை பாதுகாக்கும் சூழ்நிலை இல்லை. நடவடிக்கை எடுத்த பிறகும் எதிர்க்கட்சிகள் அதை கையில் எடுத்து அரசியல் செய்ய முயல்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.