கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணை முழுமட்டத்தை எட்டியுள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையில் தண்ணீர் திறந்து விடப்படுவதாலும், பரவலாக மழை பெய்து வருவதாலும் கிருஷ்ணகிரி அணைக்கு வினாடிக்கு 250 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையின் மொத்த கொள்ளவான 52 அடியில் 51 அடியாக நீர்மட்டம் உள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து முழுவதும் வெளியேற்றப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் அணையில் இருந்து பாசன கால்வாய்கள் வழியாக தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளளவு 51 அடி (1666.29 மில்லியன் கன அடி) ஆகும். தற்போது அணையின் நீர்மட்டம் 51 அடியாக (1551.76 மில்லியன் கன அடி) உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் அனைத்து நீரையும் வெளியேற்ற வேண்டும்.இதனால் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கும், சாத்தனூர் வரை தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. அணை
குறிப்பாக, பெரியமுத்தூர், திம்மாபுரம், சுண்டேகுப்பம், காவேரிப்பட்டினம், கல்வேஹள்ளி, பன்னீஸ்வரமடம், சௌடஹள்ளி, தளிஹள்ளி உள்ளிட்ட 8 கிராமங்களுக்கும், தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.