கடலூர்: கடலூரில் எம்.ஜி.ஆர். கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய பயிற்சி முகாமிற்கு வருகைப்பதிவு குறைவால் பயிற்சியாளர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
கடலூரில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி முகாமுக்கு வந்தவர்களில் 130 பேர் வருகை பதிவு குறைவாக இருப்பதாக வெளியே அனுப்பப்பட்டனர்.
ரேஷன் கடைகளில் விற்பனையாளராக பணிபுரியும் ஊழியர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் இந்த ஓராண்டு பட்டய பயிற்சி பெற்று வரும் நிலையில், இதற்கான தேர்வு ஆகஸ்ட் மாதம் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
வருகை பதிவேட்டை காரணம் காட்டி தங்களை வெளியே அனுப்பினால் ஒரு வருட படிப்பு வீணாகிவிடும் என்று பயிற்சிக்கு வந்தவர்கள் தெரிவித்தனர்.