சென்னை: நஞ்சை நிலம் என்றால் என்ன புஞ்சை நிலம் என்றால் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
- அதிக தண்ணீர் பாய்ச்சி வேளாண்மை செய்யக்கூடிய நிலங்கள் நஞ்சை நிலங்கள்.
2..நெல், கரும்பு, மஞ்சள், வாழை, வெற்றிலை போன்ற பயிர்களுக்கு அதிக தண்ணீர் தேவை . இவை விளையும் நிலம் எல்லாமே நஞ்சை நிலம்தான்.
3.ஆற்றுப் பாசனத்தில் விவசாயம் செய்யும் அனைத்து நிலங்களுமே நஞ்சை நிலங்கள்தான்.
4.குறைந்த நீர் பாய்ச்சி வேளாண்மை செய்யப்படும் நிலங்கள் எல்லாம் புஞ்சை நிலங்கள்.
5.. பருத்தி, கடலை, சோளம், பீன்ஸ், துவரை, எள், உளுந்து, கம்பு, வரகு, சாமை, தினை, மொச்சை, காய்கறிகள், பழங்கள், கீரைகள் இது எல்லாமே புஞ்சை நிலங்களில் விளையும்.
- கரிசலாங்கண்ணி, கொத்தமல்லி, புதினா போன்ற கீரைகள் மட்டும் நஞ்சை மற்றும் புஞ்சை ஆகிய ரெண்டு நிலங்களிலும் வளரும்.
- விவசாய நிலத்தில் வீடு கட்ட வேண்டும் என்றால் முதலில் அதை மாற்றி அமைக்க வேண்டும்.
- விவசாய நிலத்தை வீட்டு மனையாக மாற்றும் போது, அதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும். முனிசிபல் கவுன்சில் அல்லது கிராம பஞ்சாயத்தில் இருந்தும் என்ஓசி வாங்க வேண்டும்.
8.விவசாய நிலத்தை வீட்டு மனையாக மாற்ற, சில முக்கிய ஆவணங்கள் தேவைப்படும். நிலத்தின் உரிமையாளர், அடையாள அட்டை வைத்திருப்பது அவசியம்.
9., பயிர்களின் பதிவு, குத்தகை, உரிமை குறித்த விபரமும் அவசியம். அதே நேரத்தில், நில பயன்பாட்டுத் திட்டம், சர்வே வரைபடம், நில வருவாய் ரசீது ஆகியவையும் கேட்கப்படும்.
- சம்பந்தப்பட்ட நிலத்தில் நிலுவைத் தொகையோ, வழக்குகளோ இருக்கக் கூடாது.