சென்னை: நிலம், வீடு வாங்கும்போது பத்திர பதிவு செலவுகள் எவ்வளவு ஆகும்.தெரிந்து கொள்வோம் வாங்க.
ஒரு நிலம் அல்லது வீடு வாங்கும் பொழுது அதனை பதிவு செய்வது மிக மிக முக்கியமான ஒன்று. நிலம் அல்லது வீட்டை விற்பனை செய்பவரும், அதனை வாங்குபவரும் ஆகிய இரு தரப்பினரும் பல்வேறு ஆவணங்களை ரெஜிஸ்ட ரேஷன் செயல்முறையின் போது அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
சொத்து அமைந்திருக்கும் இடம் மற்றும் அதன் வகையின் அடிப்படையில், பதிவு செய்வதற்கான கட்டணங்களை அரசு தீர்மானிக்கிறது. ப்ராப்பர்ட்டி ரெஜிஸ்ட்ரேஷன் என்ற சட்ட ரீதியான செயல்முறை மூலமாக சொத்து உரிமம் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு மாற்றி தரப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை ப்ராப்பர்ட்டி ரெஜிஸ்ட்ரேஷன் என்பது முழுக்க முழுக்க அரசின் கீழ் இயங்கும் ஒரு செயல் முறையாகும். இதில் அந்த நிலத்தின் மதிப்பை பொறுத்து குறிப்பிட்ட தொகை பெறப்படுகிறது.
பதிவு செய்ய நினைக்கும் இடத்திற்கான பதிவு கட்டணங்களை தெரிந்து கொள்ள ஆன்லைன் போர்ட்டல்களை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம். பல நபர்களுக்கு நிலப் பத்திரப் பதிவு பற்றிய போதுமான தகவல் தெரிவதில்லை.
ஸ்டாம்ப் டியூட்டி சார்ஜ் என்பது பதிவு கட்டணத்திற்கான முக்கிய கூறாகும். ஆவணங்களில் பொருத்தப்படும் ஸ்டாம்ப் மூலமாக இந்த கட்டணத்தை அரசு வசூலிக்கிறது. நிலத்தின் வகையைப் பொறுத்து ஸ்டாம்ப் டியூட்டி கட்டணங்கள் மாறுபடும்.
கிராமப்புறங்களுக்கு இந்த கட்டணம் குறைவாகவும், அதுவே நகரங்களை பொருத்தவரை ஸ்டாம்ப் டியூட்டி கட்டணங்கள் அதிகமாகவும் வசூலிக்கப்படுகின்றன. இந்த ஸ்டாம்ப் டியூட்டி கட்டணமானது அந்த சுற்று வட்டாரத்தில் இருக்கக்கூடிய நிலத்தின் மதிப்பு அல்லது அரசின் கட்டணத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
பொதுவாக ஸ்டாம்ப் டியூட்டி கட்டணங்கள் அந்தந்த மாநில அரசுகள் மூலம் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆகையால் இந்த கட்டணம் இந்தியா முழுவதும் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரியாக வசூலிக்கப்படுகிறது.
தோராயமாக சொத்தின் மதிப்பில் 3 சதவீதத்திலிருந்து 10% வரை பெறப்படுகிறது. ஸ்டாம்ப் டியூட்டி கட்டணம் தவிர பதிவு செய்வதற்கான கட்டணங்களையும் செலுத்த வேண்டியது அவசியம். இந்த பதிவு கட்டணத்தை மத்திய அரசு நிர்ணயிருப்பதால் எல்லா மாநிலங்களிலும் இந்த கட்டணம் ஒரே மாதிரியாக வசூலிக்கப்படுகிறது.
பொதுவாக பதிவு கட்டணமானது சொத்தின் மொத்த மார்க்கெட் மதிப்பில் 1% என கணக்கிடப்பட்டு பெறப்படுகிறது.