சென்னை: தென்னிந்தியாவின் தாழ்வான பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு காற்று சந்திக்கும் பகுதி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக வரும் 23-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் வறண்ட வானிலைக்கு மத்தியில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

கடலோர பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்பட்டது. இந்நிலையில், சில இடங்களில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இயல்பை விட 1.6 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து உள்ளது.
இதற்கிடையில், தென்னிந்தியாவின் தாழ்வான பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு காற்று சந்திக்கும் பகுதி. இதன் காரணமாக இன்று முதல் 23-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.