சென்னை: நெசவாளர்களுக்கு உதவும் வகையில் ‘தறி’ என்ற பெயரில் கைத்தறி சேலை விற்பனை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் நேற்று தொடங்கிய இந்த விற்பனை கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை விற்பனை நடைபெறும். இதில் குஜராத், தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 31 கைத்தறி நெசவாளர்கள் கலந்து கொண்டு தங்களது கைத்தறி புடவைகள், துணிகள், துப்பட்டாக்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தினர்.
இக்கண்காட்சியில் எரிஸ்ரீ அகிம்சா பட்டுப் புடவைகள் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 56 ஆயிரம் வரையிலான விலையில் இடம் பெற்றுள்ளன. குஜராத்தின் புஜோத்தி புடவைகள் 8 ஆயிரம் முதல் ரூ. 42 ஆயிரம், கேரளாவின் வேதிகா கைத்தறி புடவைகள் மற்றும் வேட்டி விலை ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 28 ஆயிரம், மற்றும் டெல்லியின் பிரபல கோட்டா டிசைனர் பட்டு, பனாரஸ் மற்றும் காட்டன் புடவைகள் ரூ. 8 ஆயிரம் முதல் ரூ. 1.40 லட்சம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் தெலுங்கானாவில் இருந்து ரஜினி எம்ப்ராய்டரி செய்யப்பட்ட சேலைகள் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம், வாரணாசியில் இருந்து நீலம்பரி பனாரஸ் பட்டுப் புடவைகள் ரூ. 17 ஆயிரத்தில் இருந்து ரூ. 2 லட்சத்துக்கும், காட்டன் சேலைகள் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 2.5 லட்சம். மேலும், குஜராத்தின் புகழ்பெற்ற பதான் படோலா சேலைகள் ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம். இந்தப் புடவை இருபுறமும் கட்டப்பட்டிருக்கும்.
இவை தவிர இந்த விற்பனை கண்காட்சியில் பல்வேறு வகையான சேலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதேபோல், இந்திய கைவினைக் கவுன்சில் நடத்தும் கமலா அங்காடி, பரிசுப் பொருட்கள், பைகள், பொம்மைகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கைவினைப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கைவினைப்பொருட்கள் ரூ. 100 முதல் ரூ. 8 ஆயிரம் வரை இந்த விற்பனை கண்காட்சியில் விற்பனை செய்யப்படுகிறது.