சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்திற்கு எதிராக மனு தாக்கிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மனு தாக்கிய வழக்கறிஞர் மீது ரூ.1 லட்சம் அபராதம் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி மக்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குகிறது.

ஆகஸ்ட் 2 முதல் தொடங்கிய இந்த திட்டத்தின் மூலம் இரண்டு வாரங்களில் 92,836 பேர் மருத்துவ சேவைகள் பெற்றனர். இதன் வாயிலாக ரத்த பரிசோதனை, காசநோய், புற்றுநோய் மற்றும் இதய மருத்துவம் போன்ற பல துறைகளில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் மருத்துவ வட்டாரங்களில் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், வழக்கறிஞர் சத்தியகுமார் மனு தாக்கி ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் வைத்தார். ஆனால், நீதிமன்றம் இதுபோன்ற வழக்குகளை முன்னர் உச்சநீதிமன்றமும் அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளதாக தெரிவித்தது. மனுதாரர் மனுவை திரும்பப் பெற விரும்பினாலும், நீதிபதிகள் அதை ஏற்க மறுத்து ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வழக்கை நிராகரித்தனர்.
இதேபோல், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்திற்கும் எதிரான வழக்கையும் அதிமுக வழக்கறிஞர் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து அதற்கு எதிராக மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.