சென்னை: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 1056 பணியிடங்களை நிரப்புவதற்கான முதற்கட்டத் தேர்வை ஜூன் 16 அன்று நடத்தியது.
இந்தியா முழுவதும் இருந்து 14,627 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தைப் பொறுத்த வரையில் சுமார் 650 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், அரசுப் பணிக்கான முதன்மைத் தேர்வு கடந்த 20-ம் தேதி தொடங்கியது.
மெயின் தேர்வு இந்தியா முழுவதும் 24 நகரங்களில் நடைபெற்றது. தமிழகத்தைப் பொறுத்த வரை இந்த தேர்வு சென்னையில் மட்டும் நடத்தப்பட்டது. கடந்த 20-ம் தேதி கட்டுரை தேர்வு நடந்தது. தொடர்ந்து, 21-ம் தேதி காலை இரண்டாம் தாள் (பொது அறிவு 1), மதியம் மூன்றாம் தாள் (பொது அறிவு 2) நடத்தப்பட்டது.
22-ம் தேதி காலை தாள் 4-ம் (பொது அறிவு 3) மதியம் 5-ம் தாள் (பொது அறிவு 4) நடந்தது. சென்னை எழும்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரம்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பி.சி.கே.ஜி. அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வில் 650 பேர் எழுதினர்.
இந்நிலையில் இன்று மீண்டும் சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு நடைபெற்றது. இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை இந்திய மொழிகளில் ஒரு தாள் தேர்வும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை ஆங்கில தேர்வும் நடைபெற்றது.
நாளை, கடைசி நாளான, காலை முதல், விருப்பத்தேர்வு, மதியம், இரண்டாம் தாள் தேர்வு நடத்தப்படும். தேர்வு மையங்களுக்கு செல்போன், தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.