சென்னை: சென்னையைச் சேர்ந்த மைத்ரேயன், அரசியலுக்கு வருவதற்கு முன்பு மருத்துவராக பணியாற்றியவர். தனது ஆரம்ப நாட்களில் அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராக செயல்பட்டார். 1991 ஆம் ஆண்டு பாஜகவில் மாநில செயற்குழு உறுப்பினராக இணைந்தார்.
அதன்பின், 1995 முதல் 1997 வரை பாஜக தமிழ்நாடு பொதுச் செயலாளராகவும், 1997 முதல் 1999 வரை மாநில துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றார். 1999ஆம் ஆண்டு சில மாதங்கள் மாநில தலைவராகவும் பணியாற்றினார்.
பின்னர் பாஜகவிலிருந்து விலகிய அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் அதிமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்து வந்தார்.