சென்னை: நெல்லை மாவட்டம் ஊத்துப்பகுதியில் அதிகபட்சம் 8 செ.மீ. மழை பெய்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது.
ராமேஸ்வரத்தில் 7 செ.மீ., திருவாரூர், நாகை தலா 6 செ.மீ., செங்கோட்டை, தங்கச்சிமடம், நீடாமங்கலம் பகுதிகளில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.