சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்புகளை மக்கள் சார்ந்த மருந்து திட்டம் கட்டுப்படுத்துகிறது என ஆய்வு முடிவு குறித்து எக்ஸ் தள பதிவை வெளியிட்டார். உயர் இரத்த அழுத்தத்தை 17 சதவீதமும், நீரிழிவு நோயை 16.7 சதவீதமும் கட்டுப்படுத்துவதன் மூலம் பொது மருத்துவ சேவைகளின் வெற்றிக்கான அளவுகோலை மாற்றுகிறது.

ஆஸ்பத்திரிகளுக்கு மக்கள் வருவார்கள் என்று காத்திருப்பதை விடுத்து மக்களின் வீடுகளுக்குச் சென்று அடைந்த வெற்றி இது. இந்தியா முழுவதும் உள்ள பொது மருத்துவ சேவைகளுக்கு இது ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது. இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.