தர்மபுரி: தர்மபுரியில் முலாம்பழம் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மார்ச் முதல் மே மாதம் வரை கோடை வெயில் வாட்டி வதைக்கும். இந்த ஆண்டு கோடைக்கு முன்பே வெயில் வாட்டி வதைக்கிறது. இதன் காரணமாக வெள்ளரி, தர்பூசணி, முலாம்பழங்கள் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளன. தர்மபுரி மார்க்கெட்டில் முலாம்பழம் விற்பனை நடைபெற்று வருகிறது. கிலோ ₹30 முதல் ₹40 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 1ம் தேதி முதல் வெப்பம் வாட்டி வதைக்கிறது. அதிகபட்சமாக கடந்த 19-ம் தேதி 93.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. நேற்று முன்தினம் 91.7 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. இதனால் மக்கள் தர்பூசணி, நுங்கு ஆகியவற்றை வாங்கிச் சாப்பிட்டு குளிர்காய்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது முலாம்பழம் விற்பனைக்கு வந்துள்ளது. தர்மபுரி மார்க்கெட்டில் மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. கிலோ ₹40 வரை விற்பனை செய்வதாக கூறுகின்றனர்.