திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அனுப்பப்பட்டியில் உள்ள பழமை வாய்ந்த கரும்பாறை ஸ்ரீ முத்தையா சுவாமி கோயிலில் விவசாயம் செழிக்கவும், உலக நன்மைக்காகவும் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், பக்தர்கள் வழங்கிய 65 கிடாக்கள் சுபநிகழ்ச்சிகளாக வெட்டப்பட்டன.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சமையல் பணி நடந்தது. சமைத்த சாதம், ஆட்டிறைச்சி, கறி போன்ற பொருட்கள் தயாரிக்கப்பட்டு கரும்பாறையில் மலைபோல் குவிந்தன. பின்னர் முத்தையா சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையடுத்து நேற்று காலை 5 வயது முதல் 80 வயதுக்குட்பட்ட ஆண் பக்தர்கள் மட்டுமே கோயில் வளாகத்தில் தரையில் வரிசையாக அமர்ந்து உணவு உண்டனர். இதில், 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.