சென்னையில் மெட்ரோ இரயில் கட்டம்-2 திட்டத்தின் கீழ் திருமங்கலம் உள்ளிட்ட மூன்று இடங்களில் புதிய மெட்ரோ நிலையங்கள் கட்டப்படும். இதில், திருமங்கலத்தில் மெட்ரோ நிலையம் அமைக்க 12 மாடி கட்டிடம் உருவாக்கப்படுகிறது.

இந்த கட்டிடத்தின் உள்ளே மெட்ரோ செல்லும் வகையில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. மேம்பாலம் அருகே 450 மீ நீளமுள்ள நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ நிர்வாகம், போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மேம்பாலத்தை அகற்றும் திட்டத்துடன், மெட்ரோ மற்றும் பொதுப் போக்குவரத்தை ஒருங்கிணைத்து மேம்படுத்த வேலை செய்யிறது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் 54.6 கி.மீ. நீளத்தில் சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது, “காவிரி” மற்றும் “அடையாறு” என இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள், கிரீன்வேஸ் சாலை முதல் அடையாறு சந்திப்பு வரை 1.2 கி.மீ. நீளத்திற்கு சுரங்கம் அமைக்க வேலை செய்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், மெட்ரோ நிர்வாக செயல்பாடுகள் மற்றும் நகர போக்குவரத்திற்கான உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட உள்ளது.