புதுடெல்லி: மேட்டுப்பாளையம்-கோவை ரயில் நிலையத்தில் இருந்து இரட்டை இருப்புப் பாதை அமைக்க ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவாவிடம் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை ரயில் நிலையம் செல்லும் வழித்தடத்தில் இரட்டை இருப்புப் பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையை வலியுறுத்தி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணாவிடம் மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் மனு அளித்தார்.
இது குறித்து எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில், “கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை ரயில் நிலையம் செல்லும் வழித்தடத்தில் இரட்டை இருப்புப் பாதை அமைக்க வேண்டும் என மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணாவை இன்று நேரில் சந்தித்து மனு அளித்தேன்.