மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை நம்பி, ஒகேனக்கல் காவிரி, மேட்டூர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த 3 நாட்களாக வினாடிக்கு 1000 கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில், நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரித்தது.
அதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம், 151 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி, 129 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 5,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக நேற்று முன்தினம் 113.54 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 113.24 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 83.09 டிஎம்சி.