மேட்டூர்/தருமபுரி: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. அணைக்கு நேற்று வினாடிக்கு 2,106 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 747 கன அடியாக சரிந்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 20,000 கன அடி வீதமும், கால்வாய் பாசனத்துக்கு 700 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 104.89 அடியாகவும், நீர் இருப்பு 71.32 டிஎம்சியாகவும் இருந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.29 அடியும், நீர் இருப்பு 1.76 டிஎம்சியும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை முதல் வினாடிக்கு 4,000 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது.