சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக பாடத்திட்ட மறுஆய்வு வாரியத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின், நடப்பு பாடத்திட்ட ஆய்வு வாரியத்தின் (படிப்பு வாரியம்) பதவிக்காலம், ஜூலை, 11-ல் முடிவடைவதாக, அனைத்து மருத்துவ கல்லுாரிகளுக்கும், பல்கலை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதனால், புதிய வாரியம் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்களின் விவரங்களை மார்ச் 14-ம் தேதிக்குள் பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.