கரூர்: கரூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 3 புதிய நகரப் பேருந்துகளின் சேவையை பொதுமக்களுடைய பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கரூர் திருமாநிலையூர் பகுதியில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் டாக்டர்கலைஞர் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-கரூர் மண்டலம் சார்பாக புதியதாக 3 நகரப் பேருந்துக்களின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் அமர்ந்து தேநீர், ஜூஸ் உள்ளிட்டவைகளை அருந்தினார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இன்றைய தினம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-கரூர் மண்டலம் சார்பாக புதியதாக 3 நகரப் பேருந்துக்களின் சேவையை (கரூர்-2 கிளை சார்பாக கரூர்- வேலூர் வழித்தடங்களில் 1 புதிய பேருந்துக்களும் மற்றும் கரூர்-2 கிளை சார்பாக கரூர்- திருமுக்கூடலூர் வழித்தடங்களில் 1 பேருந்துக்களும் மற்றும் கரூர்-காட்டுப்புத்தூர் 1 புதிய பேருந்தும்) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ. கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, மாவட்ட வருவாய் அலுவலர் விமல்ராஜ், மாநகராட்சி மேயர் கவிதா, மாநகராட்சி ஆணையர் சுதா. துணை மேயர் சரவணன். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கரூர் மாவட்ட துணை மேலாளர் சாமிநாதன், மண்டல குழுத்தலைவர்கள் ஆர்.எஸ்.ராஜா, கனகராஜ், அன்பரசன். சக்திவேல் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.