தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சிறிய மலர் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் பவுல்.
இவர் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க அன்பழகன் உருவத்தை வித்தியாச முறையில் வரைந்துள்ளார். முழுக்க முழுக்க மாத்திரைகள் மற்றும் மருத்துவ கருவிகளால் வடிவமைத்துள்ளார்.
இதனை எம்எல்ஏவிடம் அன்பளிப்பாக அளித்து வாழ்த்து பெற்றார். மிகவும் வித்தியாசமான முறையில் எம் எல் ஏ வின் உருவத்தை ஓய்வு பெற்ற ஓவியா ஆசிரியர் வரைந்துள்ளது அனைத்து தரப்பினர் மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகிறது.
தத்ரூபமாக முகத்தோற்றத்தை இவ்வாறு வித்தியாசமான முறையில் வரைந்து அசத்தியுள்ளார் ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் பவுல்.