By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
    ஈரானின் ஏவுகணைகள், டிரோன்களை அழித்ததாக பஹ்ரைன் தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
    கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த யூடியூபர் அனுராக் டோவல்
    1 Min Read
    அசாமில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு
    1 Min Read
    ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
    1 Min Read
    ரஷ்யாவிடம் இருந்து S400 அமைப்புகள் ஐந்து எண்ணிக்கையில் வாங்கும் இந்தியா
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தென் தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு இருக்காம்… அறிவிச்சு இருக்காங்க!!!
    1 Min Read
    பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் சொல்வது என்ன?
    1 Min Read
    விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்
    1 Min Read
    தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்
    1 Min Read
    காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: உலோகத்திலும் சிறப்பு பெற்று விளங்கிய சோழர்கால சிற்பக்கலை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > உலோகத்திலும் சிறப்பு பெற்று விளங்கிய சோழர்கால சிற்பக்கலை
தமிழகம்

உலோகத்திலும் சிறப்பு பெற்று விளங்கிய சோழர்கால சிற்பக்கலை

Nagaraj
Last updated: August 28, 2025 3:29 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: கல்லில், மண்ணில் மட்டுமல்ல… உலோகத்திலும் சோழர்கால சிற்பக்கலை மிகவும் சிறப்பான ஒன்றாகும். பழங்காலத்தில் தமிழக சிற்பக்கலையை மூன்று காலங்களாக பிரிக்கலாம். சோழர், பாண்டியர், பல்லவர்கால சிற்பக்கலை என வகைப்படுத்தலாம். மதுரையும் அதைச் சுற்றியுள்ள கோயில்களில் அமைந்த சிற்பங்கள் பாண்டியர் சிற்பக்கலை, பல்லவ கால சிற்பக்கலை என்பது மாமல்லபுரம் சிற்பக்கலை வடிவங்களைச் சார்ந்ததாகும்.

சோழர்கால சிற்பக்கலை என்பது தஞ்சை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களில் உள்ள கோயில்களும், சிற்பங்களும் ஆகும். இதில் சோழர்கால சிற்பக்கலை மிகவும் சிறப்புற்று விளங்குகிறது. சிற்பங்களின் அளவு, உருவ அமைப்பிலும் சோழர்கால பாணி என்பது இன்றளவும் கலை பிரியர்களால் புகழ்ந்து பாராட்டப்படுகிறது. பஞ்சலோக சிற்பங்கள் என்றால் உலகப் புகழ்பெற்ற பெருமைமிகு இடமாக கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலை விளங்குகிறது. இப்பகுதியில் வாழும் சிற்பிகள் சோழர்கால பரம்பரை சிற்பிகள் வழி வந்தவர்கள்.

மாமன்னன் ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோயிலை பல ஊர்களில் இருந்து சிற்பிகளை அழைத்து வந்து கட்டினார். பிறகு தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு அருகில் தாராசுரம் கோயிலை இச்சிற்பிகளை கொண்டே கட்டினார். பிறகு சுவாமிமலை கோயிலில் திருப்பணிக்காக சிற்பிகள் அப்பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். திருப்பணியை முடித்தபின், காவிரி ஆற்றுப்படுகையில் கிடைக்கின்ற வண்டல் மண், பஞ்சலோக சிற்பங்கள் செய்வதற்கு ஏற்ற மண்ணாக அமைந்தமையால் சில குடும்பத்தினர் அங்கேயே தங்கிவிட்டனர்.

கல்வேலை, மரவேலை, பஞ்சலோக வேலை, கோயில் கட்டுமான வேலைகளையும் சிற்பிகள் அறிந்திருந்தனர். சுவாமிமலை மண்பதம் பஞ்சலோக சிற்பங்கள் செய்ய ஏற்றதாக பஞ்சலோக சிற்பங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தனர்.

பொதுவாக பஞ்சலோக சிற்பங்களுக்கு அதன் ஆபரணம், நகாசுவேலை மற்றும் அமைப்பு மிகவும் முக்கியமானது. இவைகளில் முக அமைப்பு என்பது ஒருவரின் கையெழுத்து எப்படி அமைகிறதோ அதேபோன்றுதான் சிற்பிகள் வடிக்கும் முக அமைப்பு. சில முக அமைப்பு கோபமாகவும், சாந்தமாகவும் அமைவது இதன் அடிப்படையாக என்று கூறலாம்.

இத்தொழிலை பாரம்பரிய முறைப்படி தான் செய்ய முடியுமே தவிர புதிய முறையில் செய்ய முடிவதில்லை. செம்பு-80%, வெள்ளி,ஈயம், தங்கம், வெள்ளி, கூட்டுக்கலவையாக-20% என்கின்ற கலவையை பாரம்பரிய முறையான மெழுகு வடிவத்தினை ஆற்று வண்டல் கட்டி காயவைத்து பின்பு மெழுகினை எடுத்து வார்படம் செய்கின்ற இம்முறைதான் இவ்வுலோக கலவைக்கு ஏற்றதாக உள்ளது.

மாற்று முறையான பெட்டி வார்ப்பட முறையில் பித்தளை உலோகத்தால் தான் வார்க்கமுடியும். இக்கூட்டு கலவைக்கு பெட்டி வார்ப்பட முறை ஏற்றது அல்ல. முதலில் மெழுகில் சிலை வடிவமைக்கப்படுகிறது. அதன் அளவு உத்தம தச தாளம், மத்திம தச தாளம், அதம தச தாளம் இதுபோன்ற மூன்று தாள பிரமாணங்களில் சிற்ப சாஸ்திரப்படி, சிலையின் அளவுகள் தென்னை ஓலையால் பங்கிட்டு கொள்ளப்படுகிறது.

அளவுகள் வைத்து முகம், மார்பு, கால், அமைத்து மெழுகில் வடிக்கப்படுகிறது. பிறகு ஆற்று வண்டல் மண்ணை அதன்மேல் பூசி தயார் செய்யப்படுகிறது. பின்னர் அதனை வெயிலில் காயவைத்து, வறட்டி விறகுகளால் சூடேற்றப்படுகிறது. அப்பொழுது மெழுகு வெளியேற்றப்படுகிறது. பின்பு செம்பு மற்றும் உலோக கலவையை 80:20 சதவீதம் என்ற சதவீதத்தில் உறுதி செய்யப்படுகிறது. அதன்பிறகு பூசிய மண் உடைத்து எடுக்கப்படுகிறது. இப்பொழுது மெழுகில் வடித்த உருவமானது உலோகத்தில் கிடைக்கிறது. இந்த சிலைக்கு நிறைய வேலை இருக்கிறது. அதாவது செதுக்குதல், கிராபி, சிசா, நகாசு, வேலைப்பாடுகள் முதலானவை உள்ளன. பிறகுதான் சிலைக்கு மெருகேற்றப்படுகிறது. இந்த உலோக சிற்பங்கள் கடல் கடந்தும் நம் பெருமையை பறைசாற்றி வருகின்றன.

You Might Also Like

தென் தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு இருக்காம்… அறிவிச்சு இருக்காங்க!!!

பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் சொல்வது என்ன?

விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்

தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்

காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள்

TAGGED:crossing the seaPanchaloka workPridestoneworktemple construction workwoodworkகடல் கடந்தும்கல்வேலைகோயில் கட்டுமான வேலைசிற்பிகள்பஞ்சலோக வேலைபெருமைமரவேலை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சமையல் குறிப்புகள்

ஆரோக்கியம் நிறைந்த கொத்தமல்லி புலாவ் செய்முறை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?