சென்னை: தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை பெருநகர மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் காலியாக உள்ள 2,676 பணியிடங்களை நிரப்ப அண்ணா பல்கலைக்கழகம் ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 6 ஆகிய தேதிகளில் எழுத்துத் தேர்வை நடத்தியது.
எழுத்துத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கு தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் https://tnmaws.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம், மேற்கண்ட இணையதளம் மூலம் செப்., 26-ம் தேதி முதல் அனுப்பப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.