சென்னை: லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதற்காக உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கு விருந்தளிக்கும் வகையில் நேற்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் அமைச்சர் உதயநிதி விருந்து அளித்தார்.
திமுக, ஒருங்கிணைப்புக் குழு அமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வி.வேலு, தங்கம் தென்னரசு, அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தவிர, வேறு யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. 234 சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் டாக்டர் கோகுல், மணிமாறன், ஹெலன் டேவிட்சன், அஞ்சுகம், ராணி, முத்துசெல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
“லோக்சபா தேர்தல் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி. அதே போல், சட்டசபை தேர்தலின் வெற்றிக்கும் பாடுபட வேண்டும்,” என, உதயநிதி கூறினார்.
விருந்தில் சீரக சம்பா, மட்டன் பிரியாணி, வஞ்சிரம் மீன் பொரியல், மிளகு கொத்து சிக்கன், மட்டன் கோலா உருண்டை, சிக்கன் முருங்கைக்காய், பராட்டா, முட்டை தோசை, நாட்டு கோழி குருமா, தயிர் பச்சடி, மாம்பழ இனிப்பு உள்ளிட்ட பல்வேறு அசைவ, சைவ உணவுகள், உருளை, முந்திரி ரொட்டி அல்வா பரிமாறப்பட்டன. இந்த உணவுகளை பிரபல சமையலர் மடப்பட்டி ரங்கராஜ் குழுவினர் தயாரித்துள்ளனர்.