சென்னை: சென்னையில் இருந்து நெல்லைக்கும், நெல்லையில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படும் நெல்லை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் எதிர்வரும் ஜனவரி 1 முதல் அதிகரிக்கப்படுகிறது. இதன் காரணமாக, ரயிலின் புறப்படும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
புதிய கால அட்டவணைக்கு ஏற்ப, சென்னையில் இருந்து புறப்படும் நெல்லை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் – 12631) இரவு 8.40 மணிக்கு புறப்படும். இப்போது, ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டதால், நெல்லை ரயில் நிலையத்தை 6.40 மணிக்கு வந்தடைக்கும் நேரத்தில் மாற்றமில்லை.
அதேபோல், நெல்லையில் இருந்து சென்னைக்கு (வண்டி எண் – 12632) புறப்படும் நேரம் 8.40 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயிலும் வழக்கமான நேரத்தை விட 35 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.
பயண நேரம் குறைவதற்காக பல்வேறு வசதிகள் ரயில்வேயின் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனால், தென் மாவட்ட பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.