புதுடெல்லி: ஆன்லைனில் பணம் அனுப்புதல், கிரெடிட் கார்டு பயன்பாடு, நிரந்தர வைப்பு நிதி போன்றவை தொடர்பான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளின்படி, வங்கி கிரெடிட் கார்டுகளுக்கான எஸ்பிஐ கட்டணம் மாதத்திற்கு 3.75% ஆக உயர்த்தப்படுகிறது.
ஒரு மாத பில்லிங் காலத்தில் மின் கட்டணம் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணம் ரூ.50,000-க்கு மேல் இருந்தால் கூடுதலாக 1% கட்டணம் விதிக்கப்படும். இதேபோல், ஐசிஐசிஐ வங்கி தனது கட்டண விகிதங்கள் மற்றும் கிரெடிட் கார்டு வெகுமதி புள்ளிகள் திட்டங்களை நவம்பர் 15 முதல் மாற்றியுள்ளது. மேலும் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கும் இந்தியன் வங்கியின் சிறப்பு நிலையான வைப்பு நிதியில் முதலீடு செய்ய நவம்பர் 30 கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் மட்டுமின்றி ரயில்வே துறையிலும் இந்த நடைமுறை மாற்றங்கள் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி முன்பதிவு காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.