சென்னை: சென்னை அருகே பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:- பாம்பன் பாலத்தை திறந்து வைக்க இலங்கையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகிறார். அவருக்கு நண்பர்கள் மத்தியில் சிறந்த நண்பன் என்ற உயரிய விருதை இலங்கை அரசு நாளை வழங்க உள்ளது.

மேலும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அரசு இதுபோன்ற அரிய, உயரிய விருதை வழங்கப் போவது தமிழகத்துக்குப் பெருமை. இலங்கை அரசுக்கும், தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு முதல் முயற்சித்து வருகிறார். ஒவ்வொரு முறையும் மீனவர்கள் விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு அவர்களை காப்பாற்றி வருகிறார்.
முன்பு கட்டப்பட்ட பாம்பன் பாலத்தை விட தற்போது அதிநவீன தொழில்நுட்பத்துடன் பாலத்தை கட்டியுள்ளார். அதுவும் நாளை ராம நவமி அன்று பாம்பன் பாலத்தை பிரதமர் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்கள் மீது மிகுந்த பாசமும் அன்பும் கொண்டவர். எனவே, வரும் 2026-ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, பா.ஜ.க., இன்று முதல் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.