திருப்பத்தூர்: இந்தி படிக்காவிட்டால் பிச்சை கூட எடுக்க முடியாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் பாதிக்கப்படக் கூடாது என முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கடந்த அதிமுக ஆட்சியில் முறையாக கூட்டுறவு தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க போலி உறுப்பினர்களை நீக்கி, உண்மையான உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், கூட்டுறவு தேர்தல் கமிஷன் மூலம் தேர்தலை நடத்த வேண்டும். கூட்டுறவு தேர்தலை நடத்துவதில் திமுகவுக்கு எந்த பயமும் இல்லை. கூட்டுறவு துறையில் ஊழியர்கள் தவறு செய்திருந்தால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் நடக்கும் குற்றங்களை அரசு கண்டுகொள்ளாமல் இல்லை. உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இது ஒன்றே அரசால் செய்ய முடியும். தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் டிவியை பார்த்த பிறகு தான் தெரிந்தது என்று அப்போதைய முதல்வர் பழனிசாமி கூறினார்.

ஆனால் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீவிரமாக கண்காணித்து குற்றங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் உரையாடல்களை மத்திய அரசு ஒட்டு கேட்பது தவறு. தமிழக பட்ஜெட் பொதுமக்களின் பாராட்டுக்குரியது. விஜய் கட்சி தொடங்கப்பட்டுள்ளது, யாருக்கு பாதிப்பு என்பது 2026 தேர்தலுக்கு பிறகுதான் தெரியும். தி.மு.க.வை பொறுத்தவரை தேர்தல் களத்தில் ஒருபோதும் பின்வாங்கியதில்லை. நேற்றைய மழையில் இன்று துளிர்விட்ட காளான் அல்ல திமுக.
75 ஆண்டுகளைக் கடந்த அரசியல் இயக்கம். ஆனால், இப்போது கட்சி தொடங்கியவுடனேயே நான்தான் முதல்வர் என்று கூறி வருகின்றனர்’’ என்றார். மேலும், அதிமுக பற்றி விஜய் ஏன் பேசவில்லை என்ற கேள்விக்கு கே.ஆர். “இந்தக் கேள்வியை அதிமுக எதிர்க்கட்சித் தலைவரிடம் கேளுங்கள் அல்லது ஸ்டெப்னி செங்கோட்டையனிடம் கேளுங்கள் அல்லது டயர், டியூப் உள்ளிட்ட அனைத்தையும் கழற்றிய ஓ.பன்னீர்செல்வத்திடம் கேளுங்கள்” என்று அதிமுக முன்னணி தலைவர்களை பெரியகருப்பன் விமர்சித்தார்.