புதுடெல்லி: வறுமை ஒழிப்பில் தமிழகம் 92 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ‘நிதி ஆயோக்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2023-24ம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டில், தமிழகம் 78 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.
வறுமை ஒழிப்பில் தமிழகம் 92 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
பருவநிலை மாற்றத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் தமிழகம் 81 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. மொத்தமுள்ள 16 இலக்குகளில் 15ல் 65 புள்ளிகளுக்கு மேல் பெற்று தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. தரமான கல்வி இலக்கில் தமிழகம் 76 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு, பிப்ரவரி 19, 2024 அன்று, “அடுத்த இரண்டு ஆண்டுகளில் வறுமையின் மீதான இறுதித் தாக்குதலைத் தொடங்க” ஒரு திட்டத்தை அமைப்பதாக அறிவித்தது. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என அழைக்கப்படும் இதற்கு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் ₹27,922 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2024-25 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த நிதியானது 5 லட்சம் ஏழைக் குடும்பங்களை வறுமையில் இருந்து மீட்கும் வகையில் தேவையான அரசு உதவிகளை ஒருங்கிணைந்த முறையில் வழங்கப் பயன்படும் என்றார். இதன் காரணமாகவே இந்த வளர்ச்சியை எட்டியுள்ளோம்