சென்னை : எந்த ஜாதியும் கோயில்களுக்கு உரிமை கொண்டாட முடியாது என்று சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
எந்த ஜாதியும் கோயில்களுக்கு உரிமை கோர முடியாது என சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
ஜாதி அடிப்படையில் கோயிலை நிர்வகிப்பது என்பது மத நடைமுறை அல்ல எனக் குறிப்பிட்ட கோர்ட், பெரும்பாலான பொதுக் கோயில்கள், சில ஜாதியினரின் கோயில்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
மேலும், ஜாதி பாகுபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள்தான் மதப் பிரிவு என்ற போர்வையில் வெறுப்பை உமிழ்வதாகவும் தெரிவித்துள்ளது.