சென்னை: கஸ்தூரிபா நகர் குடியிருப்போர் நலச் சங்கம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பழைய பொருட்கள் சேகரிப்பு முகாம் நடத்தி வருகிறது.இதன் மூலம் இதுவரை 60 மெட்ரிக் டன் குப்பைகள் முறையான மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டு நிலத்தில் கொட்டப்பட்டு வருகிறது. தவிர்க்கப்பட்டது.
இந்த ஆண்டு பிப்ரவரி 1 மற்றும் 2-ம் தேதிகளில் அடையாறு கே.என்.ஆர்.ஏ. சமூக நல மையம் (நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட் எதிரில்), வேளச்சேரி ஆக்சிஸ், திருவான்மியூர், சிவகாமிபுரம் 2-வது கிராஸில் உள்ள ஆர்எம்எஸ்எம் அசோசியேஷன் உடற்பயிற்சி கூடம், மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ப்ரீகோ மறுசுழற்சி மையம், சிங்காரவேலன் கடலோரம், சின்ன நீலாங்கரையில் நலச் சங்கம், கோட்டூர்புரத்தில் சென்னை மாநகராட்சி பூங்கா ஆகிய 6 இடங்களில் பழைய பொருட்கள் சேகரிப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
இதில், பழைய துணிகள், காலணிகள், பைகள், எலக்ட்ரானிக் கழிவுகள், காலி மாத்திரை பெட்டிகள், மை பேனாக்கள், மெத்தைகள், தலையணைகள் (வாசலில் மட்டும்), எக்ஸ்ரே பிலிம்கள், கண்ணாடி பாட்டில்கள், கடினமான மற்றும் மென்மையான பிளாஸ்டிக்குகள், செய்தித்தாள்கள், புத்தகங்கள் ஆகியவற்றை வழங்கலாம். அவை சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 86674 99135 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.