சென்னை: நாட்டில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த ஊரில் கொண்டாட உள்ளனர் சென்னையில் இருந்து பேருந்து மற்றும் ரயில்களில் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
இது தவிர பலர் சொந்த கார்களிலும், வாடகை கார்களிலும், சிலர் விமானத்திலும் பயணம் செய்து வருகின்றனர். இன்று அரசு விடுமுறை என்பதால், தீபாவளிக்கு மறுநாள், விடுமுறை முடிந்து திங்கள்கிழமை காலை சென்னைக்கு வர திட்டமிட்டுள்ள பெரும்பாலான மக்கள் ரயில் மற்றும் சிறப்பு பேருந்துகள் மூலம் தங்கள் பகுதிகளை விட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, சென்னையின் புறநகர் பகுதியான கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வரை மட்டுமே வெளியூர் பேருந்துகள் இயக்கப்படும் என்பதால், சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு மக்கள் செல்வதற்கு வசதியாக திங்கள்கிழமை காலை முதல் புறநகர் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி காட்டாங்குளத்தூரில் இருந்து தாம்பரம் ரயில் நிலையத்திற்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே உள்ள பொத்தேரி ரயில் நிலையத்தில் கூடுதலாக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டாங்குளத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு முதல் ரயில் புறப்படுகிறது. அதன்பின், 4.30, 5.00, 5.45 மற்றும் 6.20 மணிக்கு ரயில்கள் புறப்படும் என்று கூறப்படுகிறது.