சென்னை: அனைத்து நியாய விலைக் கடைகளையும் ஒரே துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பணிபுரியும் ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய, அனைத்து நியாய விலைக் கடைகளையும் ஒரே துறையின் கீழ் கொண்டு வந்து அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதிய விகிதத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

இது தொடர்பாக பலமுறை அரசுக்கு மனுக்கள் அளித்தும், அரசு அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. எனவே, அனைத்து நியாய விலைக் கடைகளையும் ஒரே துறையின் கீழ் கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.