திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள மடபுரம் கோயில் காவலர் அஜித் குமாரின் வீட்டிற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வருகை தந்தார். அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் வழங்கி ஆறுதல் கூறினார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சட்டப்படி செயல்படாமல் காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதில் இளைஞர் அஜித் குமார் உயிரிழந்துள்ளார். அதிமுக தொண்டர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் போராடி வருகிறோம்.
தமிழக முதல்வராக வேண்டும் என்று ஒவ்வொரு கட்சியும் தீர்மானம் நிறைவேற்றுவது வழக்கம். யார் முதல்வராக வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.